இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அண்மையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற வேளையில் அடுத்ததாக வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ டி20 லீக் தொடரில் பால் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவரிடம் கேப்டன்சி திறமை இருக்கு :
இந்நிலையில் அங்கு தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர் இந்திய அணியில் விளையாடி வரும் இரண்டு இளம் வீரர்கள் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அந்த இரண்டு வீரர்களாக திலக் வர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது :
திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை மைதானத்தில் விளையாடிய ஆட்டம் ஒரு புத்திசாலித்தனமான இன்னிங்ஸ். போட்டியின் சூழலை புரிந்து கொண்டு அற்புதமாக சேசிங்கை வழிநடத்திக் கொண்டு சென்று முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் அவரால் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரண்களை சேர்க்க முடியும்.
அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயரை யாரும் பெரியதாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் தொடர்ந்து ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் நிச்சயம் இந்தியனின் அடுத்த கேப்டனாக அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.
ஏனெனில் அவரின் திறமை மீது சந்தேகம் இன்றி ஒரு பக்கம் கேப்டன் மெட்டீரியல் என்பதன் காரணமாகவே அவர் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இனியும் அவரை தொடர்ந்து புறக்கணிக்காமல் விளையாட வைத்தால் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணி சார்பாக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி – விவரம் இதோ
அவர் கூறியது போலவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை கொல்கத்தா அணிக்காக கைப்பற்றிய அவர் மும்பை அணிக்காக நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடர் என ஒரே ஆண்டில் இரண்டு கோப்பையை வென்ற கேப்டனாகவும் அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



