டிராவிட் இந்திய அணியின் கோச்சாக மாற அவரது மகன் சொன்ன இந்த வார்த்தை தான் காரணம் – கங்குலி ஓபன்டாக்

Samit
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை டி20 தொடருடன் முடிவுக்கு வந்ததால் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியை பயிற்றுவிக்க இருக்கும் டிராவிட் வரும் 17ம் தேதி துவங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தனது பணியை ஆரம்பிக்க உள்ளார்.

Dravid

- Advertisement -

இந்நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்தும் அவரது மகன் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் நகைச்சுவை பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு நாள் எனக்கு டிராவிடின் மகனிடமிருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது, அப்போது நான் பேசும்போது டிராவிட்டின் மகன் என்னிடம் எனது தந்தை வீட்டிற்குள் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார். எனவே அவருக்கு வெளியே ஏதேனும் ஒரு வேலை கொடுங்கள் என்று கூறினார்.

samit 1

அதன்பிறகு நான் மீண்டும் டிராவிடிடம் போன் செய்து நீங்கள் தேசிய அணியில் பணியாற்றுவதற்கான நேரம் இதுதான். பயிற்சியாளராக உடனே வாருங்கள் என்று கூறினேன். டிராவிட்டின் மகன் என்னிடம் விளையாட்டாய் கூறியதும் பின்னர் நான் டிராவிட்டிடம் பயிற்சியாளராக கேட்டதும் மிகவும் சாதாரணமாக நிகழ்ந்தன என்று டிராவிடின் நியமனம் குறித்து கங்குலி நகைச்சுவையுடன் பேசினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெறுவது இவர்கள் கையில் தான் உள்ளது – சவுரவ் கங்குலி ஓபன்டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கும் டிராவிட் தற்போது முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக பணியாற்ற இருக்கிறார். அவரின் பயிற்சியின் கீழ் தற்போது முதல் தொடரை இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement