MS Dhoni : அப்படி என்ன தப்பு செய்துவிட்டார் தோனி. தோனியை ஆதரித்த கங்குலி – விவரம் இதோ

நேற்று முன்தினம் நடந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நோபால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. அதிலும் குறிப்பாக மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் நேரடி வாக்குவாதத்தில்

ganguly
- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நோபால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. அதிலும் குறிப்பாக மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனியின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் தோனிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50% அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் தோனியின் இந்த செயலை விமர்சிக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த செயல் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி தனது கருத்தினை பேட்டியாக வெளியிட்டுள்ளார்.

அதில் கங்குலி கூறியதாவது : நோபால் சர்ச்சை விவகாரத்தில் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது தவறு. ஏனெனில் ஒரு கேப்டனாக சூழ்நிலையை பற்றிய விளக்கம் வேண்டும் என்றே தோனி அம்பயருடன் விவாதத்தில் ஈடுபட்டார். அம்பயர்களின் தவறுகளால் அணி தோற்பதை எந்த கேப்டனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரும் மனிதன் தானே அதான் நேரடியாக சென்று விளக்கத்தினை கேட்டறிந்தார்.

Dhoni-2

இதில் தோனியின் மீது எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றும், இந்த விடயத்தில் எனது ஆதரவு தோனிக்கு உண்டு என்று கங்குலி கூறினார். ஆனால், இந்த விடயத்தில் முக்கியமான ஒரு செய்தி உள்ளது அது யாதெனில் களத்தில் இல்லாமல் வெளியில் இருந்து மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் தோனி விவாதித்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement