இப்போதுள்ள வீரர்களில் இந்த 5 பேர் என் அணியில் விளையாட தகுதியானவர்கள் – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக செயல்பட்ட கங்குலி தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் வாரியமானா பிசிசிஐ-யையும் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது உலக அளவில் பெயர் பெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கேப்டனாக இருந்த போதும் இந்திய அணியின் மதிப்பை மிகவும் உயர்த்தியவர் கங்குலி என்றால் அது மிகையல்ல.

Ganguly

- Advertisement -

இந்திய அணிக்காக இவர் உருவாக்கிய பல திறமையான இளம் வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வந்தனர். அந்த அளவிற்கு பல இளம்வீரர்களை கங்குலி தனது தலைமையில் உருவாக்கி உள்ளார். அதில் அவரது தலைமையில் உருவான வீரர்களிள் சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், கைப், அகர்கர், நெஹ்ரா, தோனி போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்நிலையில் தற்போது உள்ள இந்திய அணி வீரர்களில் யார் யார் தனது டெஸ்ட் அணியில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று அவர் ஒரு நேரலையில் பகிர்ந்துகொண்டார். பிசிசிஐ ஏற்பாடு செய்த ஒரு நேரலையில் இந்திய அணியின் துவக்க வீரர் மாயன்க் அகர்வாலுடன் பேசிய கங்குலி கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Ganguly

தற்போதைய இந்திய வீரர்களில் அவருடைய டெஸ்ட் அணிக்கு 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார். அது குறித்து பேசிய கங்குலி கூறுகையில் : இந்த தலைமுறை வீரர்களை அப்போதைய அணியுடன் இணைப்பதில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனாலும் இந்த தேர்வு கடினமானது தான் என்றாலும் தற்போது உள்ள வீரர்களின் கோலி மற்றும் ரோஹித்தை நான் கண்டிப்பாக எனது அணியில் எடுப்பேன்.

- Advertisement -

சேவாக் அணியில் இருப்பதால் உங்களை என்னால் அணியில் எடுக்க முடியாது இல்லை என்றால் உங்களையும் தேர்வு செய்வேன் என்று அகர்வாலை குறிப்பிட்டுள்ளார். அதன்படி கோலி ரோகித் ஆகியோரை முறையே துவக்க வீரராகவும், நான்காவது வீரராகவும் தனது டெஸ்ட் அணியில் தேர்வு செய்துள்ளார்.

Ind-lose

அதுமட்டுமின்றி ஜாஹீர் கான் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோரது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஜோடியாக அவர்களுக்கு இணையான வீரர்களான ஷமி மற்றும் பும்ராவை தேர்வு செய்த கங்குலி அவரது அணியில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் இருந்ததால் மூன்றாவதாக ஸ்பின்னரான அஸ்வினை எடுப்பேன் என்று தனது தேர்வினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கங்குலி தேர்வு செய்த அந்த 5 வீரர்கள் : 1) ரோஹித், 2) கோலி, 3) ஷமி, 4) பும்ரா, 5) அஷ்வின்.

Advertisement