இந்த வருடம் இந்த தொடர் நடக்க வாய்ப்பே இல்லை. கங்குலி கொடுத்த அப்டேட் – ரசிகர்கள் கவலை

Ganguly
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியது.

asia-xi-vs-world-xi

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றிருந்தாலும் அதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் விட்டுக் கொடுத்தது.

மேலும் அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை இலங்கை நிர்வாகத்திடம் இருந்து பாகிஸ்தான் அணி பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கங்குலி தெரிவித்தார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய கங்குலி :

Ganguly 1

செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளபாதிப்பு காரணமாக இந்த போட்டி ரத்து செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைவர் ஈசன் அணி ஏற்கனவே கூறியுள்ளார்.

Eshan-PCB

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்ட தகவல் வெளியானதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்த அறிவிப்பும் இதுவரை உறுதியாகாத நிலையில், ஐபிஎல் தொடரும் எப்போது துவங்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement