அவங்க சின்ன நாடுதான். ஆனா பவர் அதிகம். டி20 வேர்ல்டுகப்பை ஜெயிக்கபோகும் அணி இதுதான் – கங்குலி

Ganguly-3
- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய டி20 உலகக் கோப்பைத் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றன.

nzvsaus

- Advertisement -

இந்நிலையில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று இரவு முக்கியமான அந்த இறுதிப்போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த போட்டியில் யார் ஜெயிப்பார்கள் ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றப்போகும் அணி குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

NZ

நியூசிலாந்து அணி சமீப காலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது நியூசிலாந்து அணியின் வெற்றி காலம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற அவர்களுக்கு தற்போது டி20 உலக கோப்பையில் ஜெயிக்க அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக இருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்க வேணுனா பாருங்க. டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் ஜெயிக்கும் – கெவின் பீட்டர்சன் கணிப்பு

நியூசிலாந்து சிறிய நாடுதான் அனால் அவர்களிடம் உள்ள வீரர்கள் பயமே இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி வருங்காலத்திலும் தொடர் வெற்றிகளை குவிக்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளது.

Advertisement