இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர்கள் தான் தொடக்க வீரராக ஆட வேண்டும்.! கங்குலி அதிரடி.!

Ganguly
Ganguly

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தவறவிட்டது.இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஆம் தேதி துவங்கவுள்ளது.

Kl Ragul

ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழக வீரரான முரளி விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் கே எல் ராகுலை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள கங்குலி “. என்னை பொறுத்த வரை இந்திய அணியில் தற்போதைக்கு கே எல் ராகுல் மற்றும் முரளி விஜய்யை துவக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கலாம், நானாக இருந்தால் அதை தான் செய்வேன். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் தவான் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் மட்டும் தான் ஒழுங்காக விளையாடுகிறார். ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை ” என்று தெரிவித்துள்ளர்.

,murali vijay

கங்குலி கூறியது போலவே தவான் வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது இல்லை.தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக விளையாடியது கிடையாது. சமீபத்தில் எசக்ஸ் அணியுடனான பயிற்சி டெஸ்ட் போட்டியிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -