உலகிலேயே சிறந்த தொடராக ஐ.பி.எல் திகழ இதுவே காரணம் – குஷியான கங்குலி

Ganguly
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 10 லீக் போட்டிகளுக்கு மேல் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு போட்டியும் கடைசி ஓவர் வரை நடைபெற்று யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியாத அளவில் மும்முரமாக செல்கிறது. இந்த தொடரில் வெற்றிபெறும் என்று நினைக்கும் அணி தோற்கவும் செய்கிறது. அதேபோன்று தோற்கும் என்று நினைக்கும் அணி ஜெயிக்கவும் செய்கிறது.

ipl 1

- Advertisement -

10 போட்டிகள் நடந்து இருக்கும் இவ்வேளையில் இரண்டு முறை சூப்பர் ஓவர் போட்டியிலும் நடைபெற்று விட்டது. அந்த அளவிற்கு ஆர்வமாக சென்றுகொண்டிருக்கிறது. அதிலும் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது எனலாம்.

224 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த அந்த போட்டியில் 18-வது ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை முற்றிலுமாக தோல்வியின் பிடியிலிருந்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றனர். அந்த அளவிற்கு போட்டிகள் மிகவும் மும்முரமாக செல்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று கடைசி வரை தெரியாது. இதுதான் ஐபிஎல் தொடரின் அழகாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் உலகின் மிகச்சிறந்த லீக் தொடர் ஐபிஎல் தான் என்று தெரிவித்திருக்கிறார் பி.சி.சி.ஐ யின் தலைவர் சௌரவ் கங்குலி. இதுகுறித்து அவர் கூறுகையில் : என்ன ஒரு ஆட்டம் இப்படிப்பட்ட ஆட்டங்களில் தான் ஐபிஎல் தொடர் உலகின் மிகச்சிறந்த தலைசிறந்த டி20 லீக் தொடர் ஆகியிருக்கிறது. மிகச் சிறந்த வீரர்கள் இதன் மூலம்தான் வெளிவருகின்றனர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Advertisement