2020 ஐ.பி.எல் நிலைமை இதுதான். கடைசியாக தன் முடிவை அறிவித்த கங்குலி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ganguly
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மேலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவத் துவங்கி 600 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Ipl cup

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் மக்களே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனவே உலகம் முழுவதும் முற்றிலுமாக தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக உலகெங்கும் நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள் என அனைத்தும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பானில் துவங்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கூட ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய திருவிழாவான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

IPL

ஆனால் திட்டமிட்டபடி இந்த ஐபிஎல் தொடர் துவங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட இந்தியாவில் இந்த தொடரை நடத்தும் பொழுது அதிக அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் காரணமாக அந்த போட்டியை ரத்து செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் இந்த தொடரை துவங்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த வைரஸின் தாக்கம் குறைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் தற்போது இந்த தொடர் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் : ஐபிஎல் ஒத்திவைத்த நாளில் இருந்து கடந்த 10 நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஆரம்பத்தில் என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை.

IPL-1

மேலும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதனால் இப்போதைக்கு எதையும் திட்டமிட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் நிலையை கண்காணித்து அரசின் வழிகாட்டுதல் மட்டுமே பின்பற்றி வருகிறோம். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் என்று கூறியுள்ளார். கங்குலியின் இந்த பதில் மூலம் இந்த வருடம் ஐபிஎல் நடைபெற வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement