IND : ரவி சாஸ்திரிக்கு பிறகு இவரே இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் – கங்குலி பேட்டி

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நபர்களான சச்சின் கங்குலி லட்சுமண் ஆகியோரின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு இந்திய கிரிக்கெட்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நபர்களான சச்சின் கங்குலி லட்சுமண் ஆகியோரின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானார்.

ravi koli 2

- Advertisement -

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற ரவி சாஸ்திரி வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தினை அடுத்து ரவி சாஸ்திரி அணியின் பயிற்சியாளராக நீடிப்பாரா ? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அதன்படி தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலக கோப்பைக்கு பிறகு அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நீட்டிக்கும் திட்டம் உள்ளது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பாண்டிங் சரியான நபராக இருப்பார் என்று கங்குலி கூற்றியுள்ளார்.

Ravi

அதன்படி அவர் கூறியதாவது : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி இந்த உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அதன் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ஒருவேளை பாண்டிங் விண்ணப்பித்தால் அவருக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக பல ஆண்டுகள் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளார்.

Ricky-Ponting

மேலும், வீரர்கள் மத்தியில் இருக்கும் சூழல் மற்றும் அவர்களுக்கு அளிக்க இருக்கும் பயிற்சி என அனைத்தும் அவருக்கு நன்றாக தெரியும். எனவே அவருக்கே நாம் பயிற்சியாளர் பதவிக்கு ஆலோசனை செய்ய வேண்டும் என்று கங்குலி கூறினார். பாண்டிங் கடந்த சில வருடங்களாக டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement