விராட் கோலி இதனை மனதில் வைத்துதான் தனது கேப்டன்சியை கைவிட்டுள்ளார் – கங்குலி வாழ்த்து

ganguly
- Advertisement -

பிசிசிஐயின் தலைவரான கங்குலி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதவி விலகியதை அடுத்து அவரது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 32 வயதான விராத் கோலி மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அடுத்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் அடுத்து ரோஹித் சர்மா டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கேப்டன்சி விலகல் குறித்து பேசிய உள்ள கங்குலி கூறுகையில் : விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து. தேவையான தருணத்தில் அவர் அணியை தன்னம்பிக்கையோடு வழிநடத்தக்கூடியவர். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்ட கேப்டன்களில் அவரும் ஒருவர்.

இந்திய அணியின் எதிர்கால நலனை அவருடைய மனதில் வைத்துத்தான் இந்த ஒரு முடிவை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டிற்காக விராட் கோலி மிகப்பெரிய பங்களிப்பை இது வரை அளித்துள்ளார். அவருக்கு அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும். வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரோடு அவர் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளார்.

Kohli

உலகக்கோப்பை தொடரில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். இனிமேலும் அவர் இந்திய அணிக்காக நிறைய ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன் என கங்குலி அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் எதிர்காலத்தை தனது மனதில் வைத்துத்தான் விராட் கோலி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பதவியேற்ற கோலி இதுவரை சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வந்தாலும் ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றவில்லை என்பது மட்டுமே ஒரு குறையாக அவரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement