அந்த விஷயத்தில் என்னையே விராட் கோலி மிஞ்சிட்டாரு – சௌரவ் கங்குலி வெளிப்படையான பாராட்டு

Ganguly-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திர முதுகெலும்பு பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். கடந்த 10 வருடங்களில் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 33 வயதிலேயே ஜாம்பவானுக்கு நிகராக ஏராளமான சாதனைகளைப் படைத்தார். அப்படி உச்சத்தை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருந்த அவருடைய கேரியரில் அனைத்து வேலைகளையும் அற்புதமாக செய்ததால் ஏற்பட்ட பணிச்சுமை 2019க்குப்பின் சதமடிக்க விடாமல் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

Virat Kohli

- Advertisement -

அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து போராடிய அவர் இடையிடையே 50, 70 போன்ற ரன்களைக் குவித்த போதிலும் அதை கண்டுகொள்ளாத அனைவரும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பார்ம் அவுட்டாகி விட்டார் என்று தினந்தோறும் விமர்சித்து அணியிலிருந்து நீக்குமாறு பேசினார்கள். இருப்பினும் அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காமல் கடுமையான பயிற்சிகளுடன் விடாமுயற்சி செய்து வந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122* (61) ரன்களைக் குவித்து டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையும் 1020 நாட்கள் கழித்து 3 வருடங்களாக அடம்பிடித்த 71வது சதத்தையும் விளாசி தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார்.

என்னையும் மிஞ்சிட்டாரு:
அதனால் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து நீக்கக்கோரிய அதே முன்னாள் இந்திய வீரர்கள் தற்போது கைதட்டி பாராட்டும் நிலைக்கு வந்துள்ளனர். அதுபோக இத்தனை நாட்களாக அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டியவர்களும் தங்களது மனதார வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நுணுக்கங்கள் அடிப்படையில் விராட் கோலி தன்னை விட சிறந்தவர் என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

Virat Kohli 122

பொதுவாக தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப், பேட்டிங், செயல்பாடுகளால் எதிரணிகளை தெறிக்கவிட்ட சௌரவ் கங்குலி ஆக்ரோஷம் நிறைந்தவராக அரியப்பட்டவர். சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டில் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை அறிமுகப்படுத்திய அவருக்கு பின் ஆக்ரோசமாக செயல்படுபவராக விராட் கோலியை அறியப்படுகிறார். அதிலும் சௌரவ் கங்குலி ஆக்ரோசமாக எதிரணிகளை அதிரவிடும் வகையில் கொண்டாடுவார். ஆனால் சாதாரண விக்கெட் விழுந்தாலே அதை ஆக்ரோசமாக கொண்டாடும் விராட் கோலி வெற்றியை தாண்டி போட்டியின் ஒவ்வொரு தருணத்திலும் எதிரணியை மிரட்டும் வகையில் கொண்டாடக்கூடியவர்.

- Advertisement -

அந்த வகையில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் கங்குலியை மிஞ்சியவராக விராட் கோலி கருதப்படுகிறார். அந்தக் கேள்வியை பேட்டியின் போது தம்மிடம் கேட்ட செய்தியாளருக்கு பதிலளித்த சவுரவ் கங்குலி ஆக்ரோஷத்தை விட நுணுக்கங்கள் அடிப்படையில் விராட் கோலி தந்தையை மிஞ்சி விட்டதாக பாராட்டினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“பொதுவாக வீரர்களிடையே ஒப்பீடுகள் என்பது நுணுக்கங்கள் அடிப்படையில் இருக்க வேண்டும். அந்த வகையில் அவர் என்னைவிட நுணுக்கங்கள் நிறைந்தவர். ஏராளமான கிரிக்கெட் விளையாடிய நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் விளையாடினோம். நான் என்னுடைய தலைமுறையில் விளையாடினேன். அவர் தன்னுடைய தலைமுறையில் என்னைவிட அதிக போட்டிகளில் விளையாடப் போகிறார். தற்சமயம் அவரை விட நான் அதிக போட்டிகளில் விளையாடி இருந்தாலும் விரைவில் அவர் என்னை முந்துவார். அவர் அபாரமானவர்” என்று கூறினார்.

- Advertisement -

2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 2021 டி20 உலகக்கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினார். ஆனால் அதையே காரணமாக வைத்து அவருடைய ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாகப் பறித்த பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தான் காரணமென்று செய்திகள் வந்ததால் நிறைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க : விராட் கோலியின் 71-வது சதத்தை பாராட்டி சி.எஸ்.கே நிர்வாகம் போட்ட பதிவு – இணையத்தில் படுவைரல்

ஆனால் சதமடிக்க வில்லை என்பதற்காக அனைவரும் விமர்சித்த போது தொடர்ந்து ஆதரவு கொடுத்த சௌரவ் கங்குலி மொகாலியில் களமிறங்கிய 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அந்த செய்திகளை பொய்யாக்கினார். சமீபத்தில் கூட விரைவில் பார்முக்கு திரும்புவார் என்று நம்புவதாக ஆதரவு கொடுத்த அவர் தற்போது தன்னை விட விராட் கோலி சிறந்த வீரர் என்று வெளிப்படையாக பேசியுள்ளது அவருடைய நல்ல மனதை காட்டுகிறது என்றே கூறலாம்.

Advertisement