இவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நிரந்தரமாக ஆடவேண்டும் – கங்குலி பேட்டி

Ganguly
Ganguly
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

Jadeja 1

- Advertisement -

இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக 2009 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதற்கடுத்து பத்து வருடங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தாலும் அவரின் இடம் உறுதியாக இருந்தது இல்லை. அவ்வப்போது வந்து போகும் வீரராகவே ஆனால் அணியில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜடேஜா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய நம்பிக்கையை அவர் ஒருபோதும் கைவிட்டது கிடையாது. அறிமுகம் ஆனதிலிருந்து 10 ஆண்டுகள் ஆகி அவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் அவ்வப்போது அணியில் இருந்து நீக்கப்படுவார்.

அவர் நீக்கப்பட்டு போதும் தன்னுடைய தன்னம்பிக்கையை கையில் எடுத்து பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்து சிறப்பாக ஆடி வருகிறார். உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சை ஆடிய விதமும் இனிமேல் இவரை அணியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரை தொடர்ச்சியாக விளையாட ஏன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஜடேஜா இதுவரை 42 டெஸ்ட் போட்டிகள் 156 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என கிட்டத்தட்ட 4000 ரன்களும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement