இந்த ஐ.பி.எல் தொடரில் கங்குலியின் மனதை கவர்ந்த 6 இளம் வீரர்கள் – கங்குலி தேர்வுசெய்த 6 இளம் வீரர்கள்

Ganguly
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். சொல்லப்போனால் இளம் வீரர்கள் மட்டும் தான் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். அப்படி இந்த வருட ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி சவுரவ் கங்குலியின் பார்வையில் பட்ட வீரர்களின் பட்டியலை பார்ப்போம்

- Advertisement -

சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) :

வருடா வருடம் ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடும் சஞ்சு சாம்சன் இந்த முறையும் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார். இந்த சீசனில் 14 போட்டிகளில் 375 ரன்கள் குவித்திருக்கிறார் அதிலும் 158.89 ஸ்ட்ரைக் ரேட் என்பதுதான் இதன் சிறப்பு. இந்தியா டி20 அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்

tripathi 1

ராகுல் திரிபாதி (கேகேஆர்) :

- Advertisement -

கொல்கத்தா அணியில் ஆட இவருக்கு கிடைத்த சில போட்டிகளில்ன் வாய்ப்பை பயன்படுத்தி 230 ரன்கள் அடித்து இருக்கிறார் ராகுல் திரிபாதி.

varun chakravarthy

வருண் சக்கரவர்த்தி (கேகேஆர்) :

- Advertisement -

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட போது தனது திறமையை நிரூபிக்க முடியாமல் இருந்த இவர், கொல்கத்தா அணியில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். 13 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச தரத்தில் மாறிவிட்டார் வருன் சக்ரவர்த்தி.

gill

ஷுப்மன் கில் (கேகேஆர்) :

- Advertisement -

கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான இவர் 14 போட்டியில் ஆடி 440 ரன்கள் விளாசி இருக்கிறார். இந்த சீசன் அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

Padikkal 1

தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி) :

பெங்களூர் அணியின் இளம் வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 472 ரன்கள் அடித்துவிட்டார். இவர் தான் இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங் என்ற பெயரையும் வாங்கிவிட்டார்.

Nattu-2

தங்கராசு நடராஜன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) :

சேலம் சின்னப்பம்பட்டி சேர்ந்த இந்த இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தற்போது சர்வதேச தரத்திற்கு உயர்ந்துவிட்டார். தற்போது வரை 15 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Advertisement