தோனி செய்தது தவறு. அவர் ஏன் இதனை செய்யவில்லை – கங்குலி ஆவேசம்

Ganguly

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Jadeja

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தோனி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நேற்றைய போட்டியில் தோனி கார்த்திக்கு முன்னதாக இறங்கி இருக்க வேண்டும். ஏனெனில் தோனி கார்த்திக்கு முன்னதாக இறங்கியிருந்தால் ரிஷப் பண்ட் அதுபோன்ற ஷாட்டை அடித்து அவுட் ஆகி இருக்க அவர் விட்டிருக்க மாட்டார்.

மேலும் பாண்டியாவும் விரைவில் அவுட் ஆகி இருக்க தோனி விட்டிருக்க மாட்டார் நன்றாக ஆடி இறுதி வரை சென்று அதிரடியாக ஆட திட்டம் செய்திருப்பார். மேலும் தோனி முன்கூட்டியே இறங்கி இருந்ததால் கார்த்திக் மற்றும் ஜடேஜா பின்னால் இருப்பதால் போட்டி நமக்கு சாதகமா அமைந்திருக்கும்.

Dhoni

நேற்றைய போட்டியில் பயிற்சியாளர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. தோனி 7 ஆவது நபராக இறங்க அனுமதித்தது மிகப்பெரிய தவறு. இக்கட்டான சூழ்நிலையில் அவர் தோனியை முன் கூட்டியே அனுப்பி இருந்தால் அவரது அனுபவத்தின் மூலம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார் என்பதே என்கருத்து என்று கங்குலி கூறினார்.