எம்.எஸ்.கே பிரசாத் மட்டுமல்ல. மொத்த கூட்டத்தையும் குரூப்பாக தூக்கி அதிரடி காட்ட இருக்கும் கங்குலி – விவரம் இதோ

Prasad
- Advertisement -

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையில் அவர் உட்பட 5 பேர் உள்ளனர். இந்த தேர்வுக் குழுவில் தலைவர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோரது பதவிகாலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. மேலும் தேவாங் காந்தி, ஜத்தின் மற்றும் சரண்தீப் சிங் ஆகியோரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுவரை இருக்கிறது.

Prasad

- Advertisement -

இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக தேர்வு குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் நீக்கிவிட்டு புதிய தேர்வு குழுவினை கங்குலி நியமிப்பார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் பதவிக்காலம் முடிவடையும் எம்எஸ்கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோருக்கு மாற்று நபர்களை மட்டுமே இப்போது நியமிக்கப்படுவர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் ஆலோசனைக்குழு இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். ஏனெனில் அந்த குழுவில் இடம்பெறும் வீரர்கள் பெயரை நேரடியாக அறிவிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் அதற்காக வீரர்களை அணுகும்போது அவர்கள் முடிவை தெரிவிக்க ஓரிரண்டு நாட்கள் அவகாசம் கேட்பார்கள் இது குறித்து நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Ganguly

மேலும் பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலிக்கு வேண்டுமாயின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் மாற்றும் உரிமையும் அவரிடம் உள்ளது. எனவே சில நாட்கள் கழித்து பிரசாத் மற்றும் கோடா தவிர தெரிவுக்குழுவில் உள்ள மீத உறுப்பினர்களையும் அவர் நீக்கி அதிரடி காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement