என்ன நடந்தாலும் சரி திட்டமிட்டபடி இந்தியாவில் ரசிகர்களுக்காக இத்தொடர் நடைபெறும் – கங்குலி அதிரடி

Ganguly
- Advertisement -

கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த 13வது ஐபிஎல் டி20 தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ சரியான திட்டமிடலுடன் இந்த தொடரை நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Rohith

மேலும் இத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் பிசிசிஐயின் தலைவர் கங்குலியின் பணி அளப்பரியது என்பது நாம் அறிந்ததே. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ நிர்வாகத்தைக் கையில் எடுத்ததிலிருந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடரை கடும் போராட்டத்திற்கு இடையே வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஜூம் கால் வழியாக கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : கடந்த நான்கரை மாதத்தில் நான் 22 முறை கொரோனா பரிசோதனையை செய்து உள்ளேன். இதில் ஒருமுறை கூட எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லை. என்னை சுற்றி கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் நான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 400 பேர் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம்.

Ganguly

எல்லோருடைய பாதுகாப்பும், ஆரோக்கியமும் உறுதி செய்யப்படுவதற்காக இரண்டரை மாதத்தில் 40000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடரை பிசிசிஐ நிர்வாகம் குழு சிறப்பாக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பெருமையாக இருக்கின்றது. அதைத்தொடர்ந்து 14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான வேலைகளில் தற்போது எங்கள் நிர்வாகம் இறங்கியுள்ளது. அடுத்த வருடம் நிச்சயம் இந்தியாவில் சிறப்பாக ஐ.பி.எல் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Ganguly

மேலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறித்து பலர் பேசுகிறார்கள். மும்பை மற்றும் டில்லியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கேள்விப்பட்டேன். இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement