பும்ராவை 5 போட்டியிலும் யூஸ் பண்ணனுமா? அப்போ இதை பண்ணுங்க.. கில்லுக்கு ஐடியா குடுத்த – சவுரவ் கங்குலி

Ganguly and Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பும்ராவை எப்படி கையாள வேண்டும் : ஐடியா கொடுத்த கங்குலி

இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணியின் பந்துவீச்சை தலைமை தாங்கி வழிநடத்த இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் மூன்று போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்பார் என்றும் ஏற்கனவே அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் பும்ராவை எப்படியாவது ஐந்து போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது யோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி : ஜஸ்ப்ரீத் பும்ராவை எவ்வாறு பயன்படுத்தினால் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கலாம் என்பது குறித்த தனது யோசனையை கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவரை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது.

எனவே இதனை புரிந்து கொண்டு சுப்மன் கில் சரியான யுக்தியுடன் அவரை கையாள வேண்டும். அதாவது இந்தியா அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ அந்த முக்கியமான நேரத்தில் மட்டும் பும்ராவை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக டெஸ்ட் போட்டியிடில் ஒரு நாளைக்கு அவரை 12 ஓவர்கள் மட்டுமே வீசவைக்க வேண்டும்.

- Advertisement -

மற்ற பவுலர்கள் முன்வந்து தங்களது அதிக பங்களிப்பை வழங்கினால் பும்ராவின் பணிச்சுமை குறையும். அப்படி பும்ரா குறைந்த ஓவர்கள் மட்டுமே வீசினால் நிச்சயம் அவரால் இந்த தொடர் முழுவதுமே விளையாட முடியும். பும்ராவின் இருப்பு என்பது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பும்ரா அணியில் இருக்கும்போது மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் நம்பிக்கை கிடைக்கும்.

இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது ஸ்லிப் இடங்களில் யார் நிற்பார்கள்? – வெளியான தகவல் இதோ

எனவே அணியில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்கள் பெரியளவில் பங்களிப்பை வழங்கினால் அவரின் பந்துவீசும் சுமை குறையும். அந்த வகையில் சுப்மன் கில் பும்ராவை சரியான நேரத்தில் பயன்படுத்தி குறைந்த ஓவர்களை மட்டும் வீச வைத்தால் பும்ராவால் அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்க முடியும் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement