இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடத்தில் யார் விளையாடுவார்கள்? என்று கேள்வி எழும்பியுள்ளது.
ஸ்லிப் பகுதியில் நிற்கப்போகும் வீரர்கள் யார்? :
இந்திய அணியில் ஏகப்பட்ட திறமையான இளம் வீரர்கள் இருப்பதினால் பேட்டிங்கில் அவர்கள் இடத்தை எளிதாக நிரப்பி விடலாம். ஆனால் பீல்டிங்கை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக முதல் ஸ்லிப்பில் ரோகித் சர்மாவும், இரண்டாவது ஸ்லிப்பில் விராட் கோலியும் நின்று வந்தனர்.
அந்த வகையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரின் ஸ்லிப் பகுதியில் எந்த இருவர் அவர்களது இடத்தை நிரப்ப போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் கிடைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்தில் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய அணியில் ஸ்லிப் பகுதிகளுக்கு என சிறப்பு பிரத்யேக பயிற்சி அமர்வு வைக்கப்பட்டது. அந்த பயிற்சியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் அவருக்கு அடுத்து முதல் ஸ்லிப்பில் கருண் நாயரும், இரண்டாவது ஸ்லிப்பில் கே.எல் ராகுல், மூன்றாவது ஸ்லிப்பில் சுப்மன் கில் ஆகியோரும் நின்று பயிற்சி செய்தனர்.
இதன்மூலம் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரின் ஸ்லிப் பீல்டிங்கில் கருண் நாயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது இடத்தை நிரப்புவார்கள் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட உத்தப்பா – லிஸ்ட் இதோ
பேட்டிங்கை பொறுத்த வரை கே.எல் ராகுல் துவக்க வீரராகவும், கருண் நாயர் ஐந்தாவது வீரராகவும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர்கள் இருவருமே மிகச் சிறந்த கேட்ச்சர்கள் என்பதனால் அவர்களுக்கு ஸ்லிப் திசையில் நிற்க வாய்ப்பு கிடைக்கப்போவது குறிப்பிடத்தக்கது.