கிரிக்கெட் தாதா கங்குலி.! கத்துக்குட்டி அஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு நினைவுபடுத்திய ஒன்று..!

- Advertisement -

சமீபத்தில் டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் விளையாடியது. அந்த அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி படு தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை எண்ணி வருந்த வேண்டாம் என்று முன்னாள் இந்திய அணி வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.

gangully

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு தடைகளுக்கு பிறகே கிரிக்கெட்டில் டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்றது. கடந்த வியாழக்கிழமை ஜூன்14 ஆம் தேதி இந்தியாவுடன் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவமில்லா ஆட்டம் தான் வெளிப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோவியடைந்தது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி ‘சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. அதே சமயம் அந்த போட்டி இரண்டே நாளில் முடியும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது குறித்து வருத்தப்பட கூடாது.

historic-test

அதற்கு மாறாக அந்த போட்டியை அவர்கள் நினைவு கூர்ந்து, இனிமேல் எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கை, வங்கதேசம், ஜிம்பாபே போன்ற அணிகளும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஒரு நல்ல தொடக்கம் தான்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement