- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுவும் நல்லாதான் இருக்கு. கொரோனா அச்சத்தில் கங்குலி பதிவிட்ட புகைப்படத்தை பாருங்க – வைரலாகும் புகைப்படம்

கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக உலகமே பெரும் தாக்கங்களை சந்தித்து வருகிறது. உலகின் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதனை தாண்டி இந்தியாவின் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிசிசிஐ தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியை தொடருமாறு அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் கங்குலி. அரசாங்கங்கள் பொது இடங்களுக்கு மக்கள் செல்லவேண்டாம் என அறிவித்து வரும் நிலையில் கங்குலி எப்படியாவது இந்த வருடத்திற்குள் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு இனிமையான செய்தியை பகிர்ந்துள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து ஜாலியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவானது : மாலை 5 மணிக்கு எனது லாஞ்சில் ரிலாக்சாக அமர்ந்து சந்தோசமாக இருக்கிறேன். இதுபோன்று இறுதியாக எப்போது அமர்ந்திருந்தேன் என்று ஞாபகமில்லை என பதிவு செய்து தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் கங்குலி.

ஒருபக்கம் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்துகொண்டிருக்க கங்குலியும் தனது பணிகளை வீட்டிலிருந்து கவனிப்பாக செய்து கொண்டும் ஓய்வினையும் எடுத்துக்கொண்டு வருகிறார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் கொரோனா தீவிரம் அடைந்து வந்தாலும் மறுபக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகள் இன்றி வருத்தத்தில் உள்ளனர்.

- Advertisement -
Published by