அய்யோ போச்சு. இந்திய ரசிகர்களின் தலையில் இடியை இறக்கிய கங்குலி – விவரம் இதோ

Ganguly

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்டும் அடக்கும் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர்கள் கடந்த 2 மாதங்களாக தடைபட்டுள்ளன.

Ind

மேலும் இந்தியாவில் நடைபெறவிருந்த பிரமாண்ட தொடரான ஐபிஎல் தொடரும் கொரோனா பாதிப்பு காரணமாக இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் இறுதியில் துவங்க இருந்த இந்த தொடர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

இத்தொடரை நடத்த முடியாமல் போனால் பி.சி.சி.ஐ க்கு பெருமளவில் நிதியிழப்பு ஏற்படும் என்பதால் அவர்களும் ஏகப்பட்ட யோசனைகளை கையாண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கு எந்த பலனும் இல்லை. மேலும் அடுத்தடுத்து இந்தியாவில் நடைபெற இருந்த தொடர்களும் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது.

Ganguly

இந்நிலையில் இந்தியாவில் எப்போது கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த கொரோனா வைரஸ் உலகை மிகப்பெரிய அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. தற்போது இந்த சூழல் சற்று இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

ஆனால் நம்மிடம் இந்த வைரஸை விரட்ட எந்த ஒரு மருந்தும் இல்லை. மேலும் இந்த மருந்தை கண்டுபிடிக்க சுமார் ஆறு முதல் ஏழு மாதங்கள் பிடிக்கும் என்று கருதுகிறேன். எனவே இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப சில மாதங்கள் தேவைப்படலாம் .அதுவரை நம்முடன் இந்த பெரும் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இருப்பினும் கிரிக்கெட் போட்டியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

Ganguly

ஆனால் தற்போதுள்ள நிலைமை கணக்கில் எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கும் நரக வேதனையாக உள்ளது. கொரோனா வைரசுக்கான மருந்தைக் கண்டுபிடித்த பின்னர் தான் இந்தியாவில் கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.