இந்திய அணியை தவிர்த்து பங்களாதேஷ் அணியை பாராட்டிய பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி – விவரம் இதோ

Ganguly-2

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்து சர்வதேச அரங்கில் இந்திய அணி முதல் முறையாக வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்ட பி.சி.சி.ஐ – யின் தலைவர் கங்குலி குறிப்பிட்டதாவது : டெல்லியில் நடந்த மோசமான காற்று மாசுபாடு மற்றும் புகை மூட்டம் இருந்தும் இந்த போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி என்றும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் போட்டியை வெற்றிகரமாக வென்று காட்டிய வங்கதேச அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் கங்குலி குறிப்பிட்டிருந்தார்.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் ஷாகிப் இல்லாமலும் அந்த அணி சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.