அடுத்த ஆண்டு இந்த மாதத்தில் ஐ.பி.எல் இந்தியாவில் நடத்தப்படும் – கங்குலி உறுதி

Ganguly

இந்த வருட ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டியது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக மூன்று முறை தள்ளி போடப்பட்ட ஐபிஎல் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடையும் வரையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடும் முயற்சி கொண்டு உழைத்து தற்போது ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்களிநடைபெற்று வருகிறது.

Dubai

இந்நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடரின் பதிப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி அவர்கள் உறுதி செய்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் முற்றிலுமாக தங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன.

இதன் காரணமாக அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெறும் என்று உங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்… நாங்கள் இதுவரை அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த சீசன் முதலில் முடியட்டும் ஏலம் குறித்து அதன் பின்னர் ஆலோசித்து முடிவு செய்யலாம்.

அதே நேரத்தில் அடுத்த ஐபிஎல் தொடரின்போது இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி நிச்சயம் தயாராகிவிடும். அதனால் அந்த ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் கங்குலி. மேலும் அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரும் இந்தியாவில் நடைபெறும் என்று கங்குலி உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி போட்டியில் ஆடும்போது தோனி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை தற்போது நாங்கள் உருவாக்க வேண்டும். இதன் காரணமாக பிசிசிஐ முடிவை நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் மெகா ஏலம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.