சுப்மன் கில்லுக்கு பதிலா யாரையும் அனுப்பாததற்க்கு காரணம் இதுதான் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த துவக்க வீரரான சுப்மன் கில் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து நாடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக மாற்றுவீரரை இந்திய அணி நிர்வாகம் கேட்டு வருகிறது.

gill

- Advertisement -

மேலும் இலங்கை தொடருக்கு சென்றுள்ள ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகியோரை இங்கிலாந்திற்கு அனுப்புமாறு கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான சேத்தேன் சர்மாவிற்கு இமெயில் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனாலும் அதற்கு எந்தவித பதிலும் தராத தேர்வுக்குழு தலைவர் இலங்கையில் இருக்கும் துவக்க வீரர்களை நிச்சயம் இங்கிலாந்து அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அணியில் இடம் பெற்றிருக்கும் துவக்க வீரர்களான ராகுல், அகர்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரை வைத்து விளையாடி கொள்ளுங்கள் என்பது போலவும் பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்த சர்ச்சையான விவகாரம் குறித்து நேற்று பிறந்த நாள் கொண்டாடிய பிசிசிஐயின் தலைவர் கங்குலி பதிலளிக்கையில் : சுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை அனுப்புவது குறித்த கேள்விக்கு பதில் வேண்டுமெனில் நீங்கள் தேர்வுக் குழுவினரை தான் கேட்க வேண்டும்.

Gill

ஏனெனில் இந்திய அணியின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களே இது குறித்து பதில் கூற வேண்டும். அவர்கள்தான் இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்தார்கள் என்று கங்குலி வெளிப்படையாக கூறிவிட்டார். கங்குலியின் இந்த கருத்தின் மூலம் பிசிசிஐ-க்கும் வீரர்களின் தேர்வுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் தெளிவாக காட்டுகிறது.

gill 2

அதே சமயம் இந்திய அணியின் தேர்வுக்குழு தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள வீரர்கள் யாரும் இங்கிலாந்து செல்ல மாட்டார்கள் என்றும் அணியில் இருக்கும் வீரர்களை வைத்து விளையாட வேண்டும் என்று கறாராக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை தொடர் முடித்த பின்னர் வேண்டும் என்றால் மாற்று வீரரை அனுப்பும் திட்டம் இருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement