பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து பெரிய பதவிக்கு போட்டியின்றி வெற்றிபெற உள்ள கங்குலி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி சேர்மன் பதவி விரைவில் முடிய இருப்பதாகவும் அதற்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த ஐசிசி சேர்மன் பதவிக்கு முக்கிய போட்டியாளராக பாகிஸ்தானை சேர்ந்த நிர்வாகத்தைச் சேர்மேனான ஈசான் மணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Ganguly

- Advertisement -

மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனும் ஐ.சி.சி சேர்மேன் பதவிக்கு போட்டியிடுவார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் அது குறித்த உறுதியான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் ஐசிசி சேர்மன் பதவி குறித்து பேசிய பாகிஸ்தான் சேர்மன் ஈசான் மணி கூறுகையில் : சேர்மன் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எனக்கு துளியும் கிடையாது. இந்தியாவில் இருந்து என்னை போட்டியிடுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் நான் நிச்சயம் இதில் போட்டியிட மாட்டேன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக சேவையாற்றும் என்னை பிரதமர் இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நான் பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து பணியாற்றி உள்ளேன். ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு வரை ஐசிசி-யில் நான் பணியாற்றியதால் இப்போது எனக்கு அந்த பதவி தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Eshan-PCB

இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் தலைவராக இருக்கும் கங்குலி அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது அது முடிந்ததும் ஐசிசி சேர்மன் பதவிக்கான தேர்தலில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வெளியான செய்தியில் ஐசிசி சேர்மன் பதவிக்கு நான் போட்டியிடுவது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். ஆனால் அதில் சில சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

- Advertisement -

அது முழுவதும் களைந்துவிட்டு ஐசிசி சேர்மன் பதவி குறித்து முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பிசிசிஐ முன்னாள் நிர்வாகியான சஞ்சீவ் குப்தா : கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில் ஐசிசி கூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினராக இந்தியா சார்பாக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி விதிமுறைப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகித்து வருகிறார்.

Ganguly 1

இதனால் அவர் பி.சி.சி.ஐ யின் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்றும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்னாடி முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ தலைவர் பதவி நீட்டிப்பு என பல சட்ட சிக்கல்களில் கங்குலி சிக்கியுள்ளதால் இதிலிருந்து வெளியே வந்து பிறகு ஐசிசி தலைவர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement