விராட் கோலிக்கு நேரம் சரியில்ல போல. அவசர மீட்டிங் போட்ட கங்குலி ஜெய் ஷா – பூதாகரமாகும் பிரச்சனை

jaysha
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி குறித்தும் அவரது கேப்டன்சி நீக்கம் குறித்தும் தான் அதிகமான செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் ஆரம்பத்தில் ரோஹித்துக்கு அவருக்கும் இடையே மோதல் என்று செய்தி பரவ எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தற்போது பிரச்சினை வேறுவிதமாக திரும்பி விராத் கோலிக்கும் கங்குலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வார்த்தை போர் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Ganguly

- Advertisement -

ஏனெனில் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் போது யாரும் என்னை விலகவேண்டாம் என்று கூறவில்லை என தெரிவித்தார். அதே வேளையில் கங்குலி : விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறியிருந்தார். இப்படி இருவரும் முன்னுக்குப்பின் முரணாக வெவ்வேறு கருத்துக்களை வெளியிட தற்போது விராட் கோலி மற்றும் கங்குலி ஆகியோருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்கிற வாக்கில் செய்தி தீவிரமாகி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலியின் கருத்துக்கள் குறித்து அவசர மீட்டிங் போட்ட பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் காணொளி ஆலோசனை மூலம் விராட் கோலி குறித்து பேசிக் கொண்டனர். அப்போது கோலியின் மீது நடவடிக்கை எடுக்கலாமா ? என்பது குறித்து விவாதிக்கப்பட்டதற்கு ஜெய்ஷா விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவியையும் நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளார்.

Ganguly 1

மேலும் கோலியின் கருத்துக்கள் பிரச்சனையை வளர்க்கும் விதமாக இருப்பதனாலும், பிசிசிஐ-யின் விதிமுறைகளை கடந்து இருப்பதனாலும் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று ஜெய் ஷா கூறியதாக தெரிகிறது. அதற்கு கங்குலியும் இந்த நடவடிக்கையை இப்போது எடுத்தால் பிரச்சனையாகிவிடும் தென் ஆப்பிரிக்க தொடர் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு பொறுமையாக எடுக்கலாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய முகமது ரிஸ்வான் – குவியும் வாழ்த்துக்கள்

இந்த தகவலும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஏனெனில் கடந்த ஒரு வாரமாகவே அதிகளவு இந்திய அணி குறித்தும், பிசிசிஐ குறித்தும் வதந்திகள் பரவி வருவதால் இவை அனைத்துமே சம்மந்தப்பட்டவர்கள் வெளிவந்து பேட்டி அளித்தால் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement