டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய முகமது ரிஸ்வான் – குவியும் வாழ்த்துக்கள்

Rizwan
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நேற்று கராச்சி மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்களை குவிக்க அடுத்ததாக 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

wivspak 1

- Advertisement -

மிகப்பெரிய இலக்கினை எதிர்கொள்ள இருந்ததால் பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் சிறப்பாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் துவக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து பலமான அடித்தளம் அமைக்க பாகிஸ்தான் அணி 19வது ஓவரிலேயே வெற்றி இலக்கை சேஸிங் செய்து இந்த தொடரையும் 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் 45 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரி என 87 ரன்கள் குவித்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையையும் அவர் நேற்றைய போட்டியின் முடிவில் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அதாவது டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 2000 ரன்களை குவித்த முதல் வீரராக இவர் சாதனை படைத்துள்ளார்.

rizwan 2

இந்த 2020-ஆம் ஆண்டு மட்டும் ரிஸ்வான் 18 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என இந்த ஆண்டு 2000 டி20 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக இந்த ஆண்டு 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 73 ரன்கள் சராசரியுடன் 12 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என 1326 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை : டாப் 10-ல் இருந்தே வெளியேறிய சோகம் – வரலாறு காணாத சறுக்கல்

தனது டி20 கிரிக்கெட் கரியரின் ஆரம்பத்தில் 25 போட்டிகளில் மிக சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் துவக்க வீரராக களமிறங்கியதிலிருந்து பிரமிக்க வைக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக அவரும் பாபர் அசாமும் இணைந்து கொடுக்கும் அருமையான ஓப்பனிங் பாட்னர்ஷிப்பை சமீபத்தில் நாம் பலமுறை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement