மூன்றாவது டி20 போட்டியிலும் இதுதான் நடக்கும்.. கம்பீர் எடுத்த முடிவால் இளம்வீரர் ஏமாற்றம் – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் 2 போட்டிகளுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்று கணக்கில் கைப்பற்றி விட்டது.

மூன்றாவது போட்டியில் எந்த மாற்றமும் இல்லை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டியானது நாளை ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் போது இந்த தொடரில் வாய்ப்பு பெறாமல் வெளியே அமர வைக்கப்பட்டிருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் திலக் வர்மா, ரவி பிஷ்னாய், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பிளேயிங் இல்லாமல் வாய்ப்பு கிடைக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே அணி தான் மூன்றாவது போட்டியில் விளையாடும் என்றும் தேவையில்லாத எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய பயிற்சியாளர் கம்பீர் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன் காரணமாக கடைசி டி20 போட்டியிலும் அதே அணி தான் விளையாடும் என்று கம்பீர் உறுதியான முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளியில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னாய், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா போன்றோர் வாய்ப்பு பெறாமல் வெளியில் அமர்ந்திருக்கும் வேளையில் மீண்டும் அவர்கள் ஏமாற்றத்தையே சந்திக்க காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : 47 ரன்ஸ்.. பாகிஸ்தான் 147 வருட வரலாற்றில் யாருமே காணாத அவமான உலக சாதனை.. தெறிக்கவிட்ட இங்கிலாந்து

அதே வேளையில் முன்னணி வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாடி வருவதால் முதன்மை அணிக்கு பேக்கப் வீரர்களை தேர்வு செய்வதற்காகவே எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் தொடர்ச்சியான நிலையான அணியை கம்பீர் விளையாட வைத்து வருவதாகவும் தெரிகிறது.

Advertisement