INDIA : தவானுக்கு பதில் இவரை அணியில் சேருங்கள் – கம்பீர் ஆதங்கம்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Gambhir
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Pant

தவான் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக நாளைய போட்டியில் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தவானுக்கு பதிலாக இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரரான ரிஷப் பண்ட்-டை இந்திய அணிக்கு தேர்வு செய்துள்ளது. அவரும் இன்று இங்கிலாந்து சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தவானுக்கு பதிலாக மாற்று வீரர் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் எப்பொழுது வேண்டும் ஆனாலும் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ராயுடு இந்த உலகக் கோப்பையில் பின் விளையாடுவது அரிதான விடயம் ஆகும். ஏனெனில் அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது.

rayudu

எனவே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். மேலும் பண்ட் சில போட்டிகளில் விளையாடி உள்ளார் .ஆனால் அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக 55 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் அவரது ஆவரேஜ் 47 எனவே இந்த உலக கோப்பை தொடரில் அவரைத் தேர்ந்தெடுத்து விளையாட வைத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்று கம்பீர் கூறினார். அம்பத்தி ராயுடு இதுவரை இந்திய நிர்வாக 55 போட்டிகளில் விளையாடி 1694 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement