- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மாவிற்கு அடுத்து 23 வயது இளம்வீரரை கேப்டனாக்க விரும்பும் கவுதம் கம்பீர் – யார் அந்த வீரர்?

கடந்த சனிக்கிழமை அன்று மும்பை பிசிசிஐ அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய மீட்டிங் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்த பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. இது குறித்த தகவல்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய அணிக்கு புதிய கேப்டனாக மாறப்போகும் இளம்வீரர் :

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா முன்னணியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வி காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தான் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என்றும் தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 37 வயதினை எட்டியுள்ள ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை மட்டுமே கேப்டனாக நீடிப்பார் என்று தெரிகிறது.

அதன் பிறகு அவர் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. அதனால் நிச்சயம் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா தான் தேர்வு செய்யப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனாலும் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு கேப்டன்சி அளித்தால் அது அவருக்கு கூடுதல் சுமையை தரும் என்றும் பேசப்பட்டு வருகிறது. அதே போன்று பணிச்சுமை காரணமாகவும், காயம் காரணமாகவும் அடிக்கடி பும்ரா பெரும்பாலான போட்டிகளை தவறவிட வாய்ப்பு இருப்பதால் அவருக்கு பதிலாக நிரந்தர கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுத்துள்ளது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லிற்கு பதிலாக ஒருநாள் அணியில் அவரை துவக்க வீரராக களமிறக்குங்கள் – சுனில் கவாஸ்கர் ஆதரவு

இந்நிலையில் இந்த கூட்டத்தின் போது இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக 23 வயதான துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை நியமிக்க தான் விரும்புவதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதேபோன்று தொடர்ச்சியாக விளையாடும் திறன் கொண்ட அவரை கேப்டனாக நியமித்தால் அது அணிக்கும் நல்லது என்று கமபீர் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -