- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 ஆவது இடத்துல இந்த வீரரை இறக்குங்க பேட்டிங்கில் வெளுத்து காட்டுவாரு – கவுதம் கம்பீர் ஆதரவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியிருந்தது. நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வைத்திருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அணியின் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் அதிகபட்சமாக 58 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 44 ரன்களும் எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக வந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் விளாசி இந்திய அணி 161 ரன்கள் குவிக்க உதவினார். இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மனிஷ் பாண்டே, விராட் கோலி, சஞ்சு சாம்சன் போன்ற மிக முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும் இறுதியாக வந்த ரவிந்திர ஜடேஜா தனது காயத்தை கூட பொருட்படுத்தாமல் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்தார்.
சொல்லப்போனால் இந்த வெற்றிக்கு அவர் தான் மிகப்பெரிய காரணம்.

இந்நிலையில் பொதுவாக 6வது அல்லது 7வது இடத்தில் விளையாடி வரும் ரவிந்திர ஜடேஜாவை ஐந்தாவது இடத்தில் களமிறக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர்.

இதுகுறித்து அவர் பேசுகையில் : “ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது இடத்தில் களம் இறக்க வேண்டும் இதுதான் என்னுடைய விருப்பம். விராட் கோலி 3வது இடத்திலும் மனிஷ் பாண்டே 4வது இடத்திலும் களமிறங்கினால் கன கச்சிதமாக இருக்கும். ரவிந்திர ஜடேஜா ஐந்தாவது இடத்திலும் அவருடைய 6வது இடத்திற்கு ஹர்திக் பாண்டியா களமிறக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் வீரர்களை 7 மற்றும் 8வது இடத்திற்கு களமிறக்க வேண்டும் என்றார். ஐந்தாவது இடத்தில் களம் இறங்கினாலும் ஜடேஜா அபாரமாக ஆடுவார் என்று தெரிவித்து இருக்கிறார் கௌதம் கம்பீர்.

- Advertisement -
Published by