ஐ.பி.எல் கண்டிப்பா இப்போ அவசியம் தான். அபோதாதான் எல்லாம் மாறும் – கம்பீர் கூறிய காரணத்தை பாருங்க

Gambhir
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 21ஆம் தேதி துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏற்கனவே இருமுறை தள்ளிவைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

Ipl cup

- Advertisement -

மக்கள் அனைவரும் எப்படி வைரஸ் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்ற மன நிலையிலேயே இருந்து வருகின்றனர். மேலும் வீரர்களும் ஐ.பி.எல் தொடருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார்கள். இந்நிலையில் மக்களின் மனநிலையை மாற்ற முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் ஒரு யோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இது கடினமான காலநிலை ஆகும். நெருக்கடியான இந்த நேரம் மக்களின் மனதை சற்று பாதித்துள்ளது. ஒரு அரசியல்வாதியாக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று கூறுவேன்.

ipl 2018

மேலும் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் அதுவே தற்போது முதல் கடமை ஏனெனில் நம்மை சுற்றி தற்போது எதிர்மறையான விடயங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற ஐபிஎல் தொடரை விட வேறு சிறந்த வழி எதுவும் இல்லை. இந்த ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது.

- Advertisement -

மக்கள் அனைவரும் ஒரு அணிக்கு சப்போர்ட் செய்யாமல் மொத்தமாக கிரிக்கெட்டிற்கு சப்போர்ட் செய்து, ஐபிஎல் தொடரில் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்வார்கள். இந்த சூழ்நிலையும் மாறி விடும். கடந்த வருடங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடரை விட இந்த வருடத்தில் நடக்கவேண்டிய ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

dhoni

தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் மனநிலை முற்றிலும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. மேலும் அனைவரும் வைரஸ் பாதிப்பின் அச்சத்தில் உள்ளனர். அனைத்தும் கடந்து போகும் வரை நாம் போராட வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்திற்கு கலவையான விமர்சங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement