மற்ற எல்லோரையும் விட இவரது கேப்டன்சியை ஐ.பி.எல் தொடரில் காண காத்திருக்கிறேன் – கம்பீர் அதிரடி

Gambhir
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக பிசிசிஐ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. பல்வேறு சிக்கல்களையும் தீர்த்துக் கொண்டிருக்கிறது அணிகளுக்குள் பல சிக்கல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டிருக்கிறது பிசிசிஐ மேலும் சில அணிகள் முழுமையாக புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முற்றிலுமாக புதிய வீரர்களை களம் இறக்கியுள்ளது.

ipl

- Advertisement -

அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளும் ஒருசில வீரர்களைத் தவிர முற்றிலும் புதிய வீரர்களை களமிறக்கியுள்ளது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மற்றும் கேப்டனாக கேஎல் ராகுல் ஆகியோரை நியமித்துள்ளது.

டி20 போட்டியில் ஒரு கேப்டனாக கேஎல் ராகுல் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க காத்திருக்கிறேன் என்று முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கேஎல் ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஆனால், கேப்டனாக அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

Rahul

அவர் நன்றாகத்தான் செயல்படப் போகிறார் என்று தெரியும். ஆனால், ஒருசில கேப்டன்கள் தாங்களாகவே விரும்பி கேப்டன் பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அழுத்தத்தை தாங்க முடியாமல் பதவியை துறந்து விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள்.இதன் காரணமாகத்தான் கேஎல் ராகுல் எப்படி செயல்படப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் கம்பீர்.

Rahul

ஒருவேளை அவர் நன்றாக செயல்பட்டு விட்டால் அவர் தான் தோனிக்கான மாற்று வீரராக இருப்பார் எனில் பேட்டிங் விக்கெட் கீப்பிங் என அனைத்தையும் அவர் செய்யப்போகிறார். இதனால் தோனிக்கு மாற்று வீரர் இவர்தான் என்று தெரிவித்து இருக்கிறார் கவுதம் காம்பீர்.

Advertisement