இந்த இக்கட்டான சூழலில் நிச்சயம் ஐ.பி.எல் வேணும். அப்போதா எல்லாம் மாறும் – கம்பீர் நம்பிக்கை

Gambhir

மார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது பெரும் சிக்கலை சந்தித்து தற்போது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் அனைத்தும் துபாய் மைதானங்களில் நடைபெறும். செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தை ஐபிஎல் நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது.

ipl

இப்படியிருக்கையில் வெளிநாட்டு வீரர்களை எப்படி ஐபிஎல் தொடர் நடக்கும் நாட்டிற்கு அழைத்து வருவது என பிசிசிஐ கடுமையாக யோசித்து வருகிறது. ஒருபக்கம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் வெளிநாட்டு வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் முன்னாள் இந்திய வீரர்களும் இந்தத்தொடர் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கூறுகையில் : விளையாட்டுப் போட்டி எங்கே நடக்கிறது என்பது முக்கியம் இல்லை. ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது. எந்த ஒரு வடிவிலான போட்டிக்கும் ஏற்ற இடமாகத்தான் அந்த நாடு அமைந்துள்ளது.

இந்த தொடர் நடைபெறுவது அவசியம் தான் ஏனெனில் முக்கியமாக இது நாட்டு மக்களின் மனநிலையை மாற்றக் கூடியதாக இருக்கும். ஏனெனில் கடந்த நான்கு மாதங்களாக கோரோனோவை பற்றியே சிந்தித்து வரும் மக்களுக்கு இந்த தொடர் மன அழுத்தத்தை போக்கும் வழியாக இருக்கும்.

- Advertisement -

IPLNSG
இதில் எந்த அணி வெற்றி பெறும் ? எந்தவீரர்அதிக ரன் அடிப்பது ? யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவது ? என்பதை விட நாட்டு மக்களின் மனநிலையை மாற்ற கூடிய முக்கிய நிகழ்வாக இந்த தொடர் மாற வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த ஐபிஎல் தொடர் மாற்றி தொடர்களை விட முக்கியமானது. மேலும் இது தேசத்திற்கான மாற்றமாக இருக்கும் என நினைப்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.