ரோஹித், கோலி இல்ல. இவங்க 2 பேர் தான் டி20 உலககோப்பைக்கு ரொம்ப முக்கியம் – கவுதம் கம்பீர் பேட்டி

Gambhir
Advertisement

ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் சில வாரங்களில் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணியின் வீரர்களின் பட்டியலையும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் நிர்வாகமான ஐசிசி அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்திருந்தது. அதன்படி தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது உலகக்கோப்பை தொடருக்கான அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India

இந்திய அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருவதால் செப்டம்பர் 11-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் இந்திய அணியை அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் பெரும்பாலான வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறுவார்கள் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

- Advertisement -

அதோடு இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடும் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஆசிய கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி அறிவிக்கப்படும் வேளையில் பல ஆச்சரியங்கள் நமக்கு காத்திருக்கலாம். ஆனால் சில வீரர்களின் காயமும் நமக்கு ஒரு பெரிய ஆபத்தாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஆசிய கோப்பை தொடர் அறிவிப்பதற்கு முன்னர் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை.

Ravindra Jadeja Hardik Pandya

அதோடு தற்போது ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர்களின் உடல் தகுதி எல்லாம் கவனத்தில் கொண்டு தான் அணி அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் மற்ற அனைவரையும் காட்டிலும் பம்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் உடல் தகுதியின் அடிப்படையில் சற்று இக்கட்டான நிலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒரு எவ்வளவு பெரிய வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இவர்கள் இருவரும் நல்ல உடல் தகுதியோடு இருக்கும் பட்சத்தில் அவர்களால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தர முடியும்.

இதையும் படிங்க : கோலியின் பேட்டிங்கை பார்க்க டிவியை போட்டேன் ஆனால் – சூரியகுமார் ஆட்டத்தை வியந்து பாராட்டும் பாக் ஜாம்பவான்

பாண்டியா பேட்டிங்கில் மட்டுமின்றி தற்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியும் வருவதால் அவர் நமது அணியின் மிக மதிப்பு மிக்க வீரராக இருப்பார். அதேபோன்று பும்ராவும் இந்திய அணியின் முக்கியமான வீரர் என்பதை உலக கோப்பையில் நிரூபிப்பார் என கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement