IND vs NZ : இதெல்லாம் ஒரு காரணம் என்று போட்டியை நடத்தாமல் இருப்பது தவறு – கம்பீர்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் அவுட்பீல்டு ஈரமாக இருந்த காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு

Gambhir
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் அவுட்பீல்டு ஈரமாக இருந்த காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

rain

- Advertisement -

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டு வெற்றி மற்றும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னல் வீரரான கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் கம்பீர் கூறியதாவது : இந்த போட்டி அவுட்பீல்டு ஈரமாக இருந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இது தேவை இல்லாத ஒன்றாகும். ஏனெனில் இரண்டு மூன்று மணி நேரம் பெய்த மழை நின்று நீண்ட நேரமாகியும் அவுட்பீல்டு ஈரமாக இருந்ததால் போட்டியை நிறுத்தினார்கள். ஆனால் மைதானத்தில் மழை பெய்த உடனே மைதானம் முழுவதும் மூடி வைத்திருந்தால் அவுட்ஃபீல்டு தயாராவதற்கு நேரமாகி இருக்காது.

worldcup 1

ஆனால் அதை செய்யாமல் விளையாடும் பிட்ச் மட்டும் மூடி வைத்திருந்தார்கள் மேலும் போட்டி வெளிச்சமின்மை, மின்சாரம் கோபுரம் கோளாறு என மற்ற ஏதாவது காரணத்தால் போட்டி கைவிடப்பட்டு இருந்தாலும் பிரச்சனையில்லை. இதுபோன்ற காரணத்திற்காக போட்டியை ரத்து செய்வது தவறான விடயம் ஐசிசி இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் இது உலகக்கோப்பை தொடர் இதனை காண பலகோடி ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்று கம்பீர் கூறினார்.

Advertisement