இப்போ கேப்டன மாத்துனா மட்டும் எல்லாம் மாறப்போகுதா ? முன்னணி ஐ.பி.எல் அணியை கிழித்தெடுத்த – கம்பீர்

Gambhir
- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடர்களில் இந்த இரண்டு ஆண்டுகள் தான் பெரும்பாலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கும் அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு வருடங்களில் இந்த அணி கோப்பையை கைப்பற்றியது.

Gambhir

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் என்றால் அது மிகையல்ல. ஆனால் அவர் அந்த அணியில் இருந்து விலகிய கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியின் செயல்பாடு அந்த அளவிற்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதனால் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கார்த்திக்கின் தலைமையில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டாலும் தற்போது தனது கேப்டன் பதவியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் இடம் கொடுத்திருக்கிறார். இனிமேல் கொல்கத்தா அணி விடிவுகாலம் பெறும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனெனில் சென்ற வருடம் தான் உலக கோப்பையை வென்று இருந்தார் இயான் மார்கன்.

morgan

இந்நிலையில் இந்த கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியுள்ள முன்னாள் கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது…கிரிக்கெட் என்பது ஒரு உறவு முறை சார்ந்த விஷயம் அல்ல. செயல்பாடுகளின் மூலம் தக்க வைக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும். தற்போது கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் இயான் மார்கன் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.

Morgan

தொடர் தொடங்கும்போதே அவரிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தால் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார். இப்போது அது மிகப் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார் கௌதம் காம்பீர்.

Advertisement