இந்த வருஷமும் அவர் சரியா விளையாடலான அவர் கதை முடிஞ்சது – நேரடியாக விமர்சித்த கம்பீர்

Gambhir

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் சீசன் நாளை மறுநாள் முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்தும், நடைபெற்று முடிந்த தொடர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் குறித்து கௌதம் கம்பீர் காட்டமான கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளார். இதுவரை 8 ஐபிஎல் சீசன்களில் பங்கேற்றுள்ள மேக்ஸ்வெல் இரண்டு முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

Maxwell

இருப்பினும் இன்றுவரை அவருடைய மவுசு ஐபிஎல் தொடர்களில் குறையவில்லை. எப்பொழுது ஐபிஎல் ஏலம் போனாலும் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போகிறார். கடந்த ஆண்டு கூட 10 கோடி மதிப்பில் ஏலம் போன அவர் பஞ்சாப் அணி 108 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் கடந்த ஆண்டு அணியில் இருந்த அவரை பஞ்சாப் அணி விடுவித்தது. இந்நிலையில் இந்த வருடம் யாரும் ஏலம் எடுக்க மாட்டார்கள் என்று கருதப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே மேக்ஸ்வெல்லை வாங்க கடுமையான போட்டி இருந்தது.

இறுதியில் ஆர்சிபி அணி 14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவ்வளவு பெரிய தொகைக்கு இவர் ஏன் ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் கம்பீர் மேக்ஸ்வெல் குறித்து கூறுகையில் : 2014ஆம் ஆண்டு மட்டுமே அவர் சிறப்பாக விளையாடினார். அடுத்து ஒரு தொடரில் கூட அவர் அதிரடியை காட்டவில்லை என்று தெரிவித்தார்.

maxwell

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தொடர்ந்து மேக்ஸ்வெல் சொதப்பிக்கொண்டே இருந்தாலும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைக்கிறது. அதன் காரணமாகவே அவர் தொடர்ந்து பல கோடிகளுக்கு ஏலம் போகிறார். ரசலும், மேக்ஸ்வெல் மாதிரி பவர் ஹிட்டர் தான். ஆனால் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கவே கொல்கத்தா அணிக்காக அவர் தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால் மேக்ஸ்வெல் அப்படி அல்ல பல அணிகளுக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்.

- Advertisement -

maxwell

இதற்கு காரணம் அவர்களுடைய சொதப்பலான பேட்டிங் தான். ஒவ்வொரு முறையும் மேக்ஸ்வெல்லை நம்பி அணி நிர்வாகங்கள் ஏலம் எடுக்கின்றனர். இந்த முறையும் அவர் ஆர்சிபி அணிக்காக அதிரடியாக விளையாட தவறினால் அவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதுமட்டுமின்றி அடுத்த வருடம் அவர் ஏலம் எடுக்கப்படாமல் போகவும் வாய்ப்புள்ளது என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.