இவர்கள் இருவரும் இல்லையென்றால் கோலி கேப்டன்ஷிப்பில் ஜீரோ தான் – கம்பீர் பேட்டி

Gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றாலும் முக்கியமான தொடர்களில் அதாவது உலக கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் முக்கியமான நேரத்தில் தோற்று வெளியேறுகிறது.

Kohli-2

இதனால் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் இந்திய அணிக்காக அவர் ஆற்றியுள்ள பங்கு காரணமாக மீண்டும் அவர் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திறமை இருந்தும் இந்திய அணியால் முக்கிய வெற்றிகளை குவிக்க முடியவில்லையே என்ற கேள்வியும் உள்ளது. தற்போது கோலியின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கோலி குறித்து அவர் கூறியதாவது : கோலி நன்றாகவே அணியை வழிநடத்துகிறார். இருப்பினும் அவரால் முக்கிய போட்டிகளில் வெற்றிபெற முடியவில்லை. அதேபோன்று கோலி நன்றாக கேப்டன் செய்ய தோனி மற்றும் ரோஹித் ஆகியோர் இருப்பதே காரணம். ஏனெனில் தோனி மற்றும் ரோஹித் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் தனியாக கேப்டன்ஷிப் செய்து பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

Kohli-1

ஆனால் அவர்களை ஒப்பிடும்போது ஐபிஎல் போட்டிகளில் கோலி சாதனை எதுவும் நிகழ்த்தவில்லை மேலும் அவர்கள் இருவரும் அணியில் இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. எனவே அவர்கள் இல்லாமல் கோலி இந்திய அணியை தலைமை தாங்கினால் தான் உண்மையான திறமை தெரியும். தற்போது கோலியின் கேப்டன்ஷிப் அருமையாக உள்ளது அவர் தொடர்ந்து முக்கியமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -