- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஓவரா ஜும் பண்ணா அப்படித்தான் தெரியும். அம்பயர் சொன்னா கேளுங்க – கே.எல் ராகுலுக்கு கம்பீர் அறிவுரை

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் அம்பயர்கள் செய்யும் சில தவறுகளால் சமூக வலைதளத்தில் அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி தங்களது 2-வது இன்னிங்சை விளையாடி கொண்டிருந்தபோது துவக்க வீரரான ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அப்போது யான்சென் பந்துவீச்சை எதிர் கொண்ட ராகுல் ஸ்லிப் திசையில் நின்ற மார்க்கம்-மிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அதில் திருப்தியடையாத ராகுல் பந்து கீழே பட்டதா என்று அம்பயரிடம் வினவினார். மேலும் மூன்றாவது அம்பயரும் பலமுறை அதை சோதித்த பிறகும் பந்து தரையில் பட்டதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக மைதானத்தில் இருந்த அம்பயர் கொடுத்த சாப்ட் சிக்னல் அவுட் என்பதனால் 3-வது அம்பயரும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விக்கெட் தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக ராகுல் தனது விக்கெட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் சற்று வருத்தத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் ராகுலின் இந்த விக்கெட் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறுகையில் : ராகுலின் விக்கெட்டை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது பந்து தரையில் படுவது போன்று தான் தெரியும். அதுவும் அதிகமாக ஜூம் செய்து பார்க்கையில் எந்த ஒரு பந்துமே இதுபோன்று கேட்ச் பிடிக்க படுகையில் கீழே பட்டது போன்று தான் தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க : 240 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி. தோக்க கூடாதுனுனா இதை செய்தே ஆகனும் – விவரம் இதோ

ஆனால் பந்து நார்மலான வேகத்தில் பார்க்கும்போது விரலின் அடியில் தான் உள்ளது. அதே வேகத்தில் மீண்டும் பார்த்தால் மட்டுமே தெரியும். இது போன்ற விக்கெட்டுகள் விழும்போது அதிகமாக ஜூம் செய்து பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் எப்போதும் குழப்பம் தான் ஏற்படும் என்று கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by