ஜடேஜாவை இந்த போட்டியில் ஆட வையுங்கள் அவர் இதனை நிச்சயம் செய்வார் – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

Ind-vs-Nz

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் ஜடேஜா பற்றி கூறியதாவது : இன்றைய போட்டியில் ஜடேஜா நிச்சயம் அணியில் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட கோலியும் அவரும் சமாகாலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.

ஜடேஜா பவுலிங்கிலும் சிறந்த அனுபவத்துடன் உள்ளார். 10 ஓவர்களை முழுவதுமாக வீசும் ஜடேஜாவை இறக்கினால் அவர் பவுலிங்கும் செய்வார் மேலும், பிறகு அணிக்கு தேவையான முக்கிய நேரத்தில் அவர் பேட்டிங்கும் செய்து இறுதிநேரத்தில் இலக்கினை வெற்றிகரமாக துரத்தவும் செய்வார். 7 ஆவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை இறக்கி பந்துவீச்சில் பலம் இழப்பதை காட்டிலும் ஒரு ஆல்ரவுண்டராக ஜடேஜா விளையாடுவது நல்லது.

jadeja

மேலும், பாண்டியா மற்றும் ஜடேஜா என இரண்டு ஆல்ரவுண்டர்கள் இருந்தால் அணிக்கு அது மேலும் பலத்தை தரும் எனவே இந்த போட்டியில் என்னை பொறுத்தவரை கார்த்திகை காட்டிலும் ஜடேஜாவை தேர்வு செய்வதே சிறப்பான யோசனை என்று கம்பீர் கூறினார்.

Advertisement