இதனால தான் அந்த பையனுக்கு ஐ.பி.எல் ஏலத்துல கோடிகளை வாரி கொடுத்தாங்க – இளம்வீரரை புகழ்ந்த கம்பீர்

gambhir
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய விலைக்கு ஏலம்போன சில வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதே வேளையில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தனர். அந்த வகையில் ஜாம்பவான் அணியான மும்பை அணி இம்முறை சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்து மோசமான சாதனையுடன் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

MI vs RR Ishan Kishan

- Advertisement -

மும்பை அணியின் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முக்கிய வீரர்கள் இடமிருந்து பெரிய ஆட்டம் வெளிவராதது என்று பலராலும் கூறப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இஷான் கிஷன் பெரிதளவில் சோபிக்காதது மும்பை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்று பலரும் குறை கூறினர்.

15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் 15.25 கோடி கொடுத்து இஷான் கிஷனை மும்பை அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. ஆனால் இந்த சீசன் முழுவதுமே அவரிடமிருந்து மிகப்பெரிய ஆட்டம் வெளிப்படவில்லை இருந்தாலும் அவரை நம்பி மும்பை அணி அடுத்த சில சீசன்களில் அவரை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் மும்பை அணியில் சரியாக விளையாடாத அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது திறனை நிரூபித்து வருகிறார்.

ishan kishan 2

நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய அவர் 48 பந்துகளில் 11 மற்றும் 3 சிக்சர் என 76 ரன்கள் குவித்து அசத்தினார். துவக்க வீரராக களம் இறங்கிய அவர் மிகச் சிறப்பான அதிரடியை ஒவ்வொரு ஓவரிலும் வெளிப்படுத்தினார். அவரது இந்த ஆட்டம் மீண்டும் அவர் பார்மிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கும்படி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இஷான் கிஷனின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில் : இஷான் கிஷன் மிகவும் அபாயகரமான வீரர் என்பதை இந்த போட்டியில் நீங்கள் பார்த்திருக்கலாம். அவர் கொடுத்த அதிரடியான துவக்கம் இந்திய அணி பெரிய ரன் குவிப்புக்கு செல்ல காரணமாக அமைந்தது. அவரது இந்த அதிரடியான துவக்கத்தின் காரணமாக தான் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை இவ்வளவு கோடி கொடுத்து அவர்களது அணியில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : அவர் இல்லாத சமயத்தில் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார் – ரிஷப் பண்ட் மீது முன்னாள் வீரர் அதிருப்தி

ஒரு ஓவரில் மற்ற வீரர்கள் 20 ரன்கள் அடித்து விட்டால் அது போதும் என்று நினைத்து சிங்கிள் எடுக்கும் மனநிலையுடன் விளையாடுவார்கள். ஆனால் இஷான் கிஷன் ஒரு ஓவரில் 20 ரன்கள் அடித்த பின்பும் அந்த ஓவரை 26 ரன் ஓவராக மாற்ற விரும்பும் முயற்சிகளைச் செய்கிறார். இதுதான் நான் அவரிடம் பார்க்கும் நல்ல விஷயம். டி20 கிரிக்கெட்டில் இது போன்ற வீரர்கள்தான் தேவை என்று கம்பீர் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement