மே.இ தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் அணித்தேர்வு முட்டாள் தனமானது – கம்பீர்

gambhir
- Advertisement -

இந்திய அணி நடப்பு நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி 17 மற்றும் 18ம் தேதிகளில் கலந்தாலோசிக்கப்பட்டு இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி உலக கோப்பை தொடரில் தோல்வி அடைய சில முக்கியக் காரணங்கள் உள்ளன.

அதிலும் அணி தேர்வில் உள்ள தவறான விடயங்கள் நான் குறிப்பிட வேண்டும். இந்திய அணியில் தவான் மற்றும் ஷங்கர் காயம் அடைந்த பிறகு அவர்களுக்குப் பதிலாக ராயுடுவை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அவரை தேர்ந்தெடுக்காமல் பண்டைத் தேர்வு செய்தீர்கள் அதுவும் தவறான முடிவு. மேலும் அரையிறுதியில் தோனியை ஏழாவது வீரராக அனுப்பியதால் அந்த போட்டியில் தோற்றம்.

Dhoni-2

தோனி ஒருவேளை முன்கூட்டியே இறங்கி இருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்த தொடரில் இந்திய அணியில் நடந்த அணித்தேர்வு முறைகேடு தோல்விக்கு காரணம். இந்நிலையில் அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணித்தேர்வு என்பது தேவையற்றது மற்றும் முட்டாள் தனமானது.

Kohli

இப்போது இருக்கும் அணியே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக களம் இறங்கலாம். ஆனால் ஒரே ஒரு விடயம் மட்டும் மாற்றம் செய்ய வேண்டும். அது யாதெனில் தோனியை 7 ஆவது வீரராக களமிறக்காமல் முன்கூட்டியே களம் இருக்க வேண்டும். இது தவிர எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்று இந்திய அணி நிர்வாகத்தை கம்பீர் கடுமையாக சாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement