டி20 உலகக்கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இவர்களுக்கே நெருக்கடி அதிகம் – கம்பீர் கருத்து

Gambhir
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடர் துவங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தற்போது இந்த உலகக் கோப்பை தொடருக்காக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அட்டவணையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

cup

- Advertisement -

எப்பொழுதுமே இந்தியா பாகிஸ்தான் சாதாரணமாக மோதிக் கொண்டாலே உலகக்கோப்பை போட்டி போல பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த டி20 உலக கோப்பை லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோத இருப்பது மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவ்விரு அணிகளும் மோதுவதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் வருகின்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணியின் ஆதிக்கம் இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Pak

தற்போது உள்ள நிலையில் இந்திய அணி மிகவும் பலமான அணியாக திகழ்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு அதிக நெருக்கடி உள்ளது. ஏனெனில் இதற்கு முன்பே உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஐந்து முறை தோற்று நெருக்கடியில் உள்ளது. இதனால் அந்த அணி தற்போதும் நெருக்கடியுடன் விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Pak-1

இந்திய அணி எவ்வளவு பலமான அணியாக இருக்கின்றதோ அதே போன்று தற்போது பாகிஸ்தான் அணியும் பலமாகவே திகழ்கின்றது. இந்திய அணிக்கு சமமாக பாகிஸ்தான் அணியும் இருப்பதால் நிச்சயம் இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி பரபரப்பாக செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement