தோனி இந்த இடத்தில் இறங்கினால் தான் அது சி.எஸ்.கே அணிக்கு நல்லது – கவுதம் கம்பீர் பேட்டி

- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனி முன்பைப் போல அதிரடியாக விளையாட முடியவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அவரது மந்தமான ஆட்டம் இந்த 14 சீசனிலும் தொடர்ந்து வருகிறது. ஓய்வு பெறும் வேளையில் நிச்சயம் அதிரடியாக சில இன்னிங்ஸ்களை விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டு கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தோனியின் ரன் குவிப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ள நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த தொடர் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த கௌதம் கம்பீர் தோனி சிஎஸ்கே அணியில் எந்த இடத்தில் ? இறங்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எப்போதுமே நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யவே விரும்புவார். ஆனால் ஐபிஎல் தொடர்களில் மட்டும் அவர் ஆறாவது அல்லது ஏழாவது பேட்ஸ்மேனாக இறங்கி வருகிறார். அவர் அப்படி செய்யாமல் நான்காவது இடத்தில் இறங்கினால் நிச்சயம் அது அணிக்கும் சாதகமாக அமையும். தோனி விளையாடுவது அணி வீரர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் என்று குறிப்பிட்டார்.

dhoni 1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடுவது கடினமாக தான் இருக்கும். ஏனெனில் ஐபிஎல் தொடரில் உலகின் டாப் பவுலர்கள் விளையாடுகிறார்கள். என்னை பொருத்தவரை தோனி நான்காம் இடத்தில் இறங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் அது சிஎஸ்கே அணிக்கு பலமாக அமையும் என்று கூறியுள்ளார்.

Dhoni

ஏற்கனவே இந்தியாவில் துவங்கி நடைபெற்ற இந்த ஐ.பி.எல் தொடரானது கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement