அடுத்த ஆண்டும் சி.எஸ்.கே அணியில் இந்த ஒருவிஷயத்தில் மாற்றம் இருக்காது. அதில் ஆச்சரியம் இல்லை – கம்பீர் வெளிப்படை

Gambhir

இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் தோனிக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு என்று நாம் அறிந்ததே. கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தோனி ஓய்வு முடிவை அறிவித்ததால் அவரது ரசிகர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அப்போது இருந்த ஒரே ஆறுதல் தோனி சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடப் போகிறார் என்பது மட்டும்தான். இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணி பிளேஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறியது.

இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் தங்களது அணியை விட்டுக்கொடுக்காமல் என்றும் நாங்கள் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தான் என்று பாசத்தை காட்டி வருகின்றனர். ரசிகர்களின் இந்த ஆதரவினை பார்த்து வியந்த தோனியும் இதுபோன்ற ரசிகர்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல சிஎஸ்கே அணி நிர்வாகமும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை தோனி தான் தலைமை தங்குவார் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்கு மோசமாக இருந்தாலும் அனைத்தையும் மொத்தமாக நாங்கள் மாற்ற விரும்பவில்லை, அதற்கான அவசியமும் இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி குறித்தும், தோனி குறித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது : சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரத்தை அளிக்கிறது. அவர் அனைத்து விதமான மரியாதையுடன் அந்த அணியில் இடம் பெறுகிறார்.

Dhoni

அவர்களுக்கான இந்த உறவு அற்புதமானது. அடுத்த வருடமும் கேப்டனாக தோனி இருப்பார் என நிர்வாகம் கூறியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர் விளையாட நினைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் ஏனெனில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை பெற்று கொடுத்தவர். மும்பை அணிக்கு பிறகு ஒரு பெரிய அணியாக சென்னையை எடுத்து நிறுத்தியுள்ளார் எனவே தோனியின் தலைமையில் தான் அந்த அணி இருக்கும்.

- Advertisement -

Dhoni

அவரும் அணிக்காக விசுவாசமாக இருக்கிறார். ஆனால் தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருடைய இதயம், ஆன்மா, வியர்வை, தூக்கமில்லா இரவுகள் என சிஎஸ்கே அணிக்காக கொடுக்கிறார் அது எனக்கு தெரியும். தோனி கண்டிப்பாக கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் ஆகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.