பேட்டிங் பயிற்சியாளராக ஆவதற்கு இந்த தகுதியெல்லாம் தேவையே இல்லை – கம்பீர் ஓபன் டாக்

Gambhir

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டு உள்ளதால் இந்த ஓய்வு நேரத்தில் வீரர்கள் தங்களது கிரிக்கெட் குறித்து அனுபவங்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் அவர்கள் தங்களுக்குள்ளேயே இன்ஸ்டாகிராமில் நேரலையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டும் வருகின்றனர்.

gambir

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் டி20 போட்டிகளில் பேட்டிங் பயிற்சியாளர் குறித்த தனது கருத்துக்களை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் போதுமான கிரிக்கெட் அறிவு இல்லை என்றாலும் வெற்றிகரமாக பயிற்சியாளராக முடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் இதில் உண்மை இல்லவே இல்லை. t20 கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் செய்ய வேண்டியது உங்களது மனநிலையை சாந்தப்படுத்தி எப்போதும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். மேலும் மனநிலையை மாற்ற அவர் கொடுக்கும் பயிற்சி உங்களுடைய இலக்கை அடைய வைக்கும்.

Gambhir 1

மேலும் டி20 போட்டியில் முக்கியமாக சொல்லித்தர வேண்டிய ஒரே விடயம் யாதெனில் பிக்ஷாட்ஸ் தான். போட்டியின் போது மிகப்பெரிய ஷாட்டுகளை ஆட நீங்கள் தயாராக வேண்டும் ரிவர்ஸ் லேப்ஷாட் மற்றும் லேப்டாப் எப்படி அடிக்கவேண்டும் என்று உங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை எந்த பயிற்சியாளரும் உங்களுக்கு அதை சொல்லி தர மாட்டார்கள்.

- Advertisement -

அப்படி பயிற்சியாளர் யாராவது வீரரை மாற்ற முயன்றால் அது வலியை ஏற்படுத்திக் கொடுக்கும் சிறந்த பயிற்சியாளராக மாறுவதற்கு ஏராளமான கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டிய தேவையில்லை. வீரர்களின் மனநிலையை புரிந்து கொண்டாலே போதும் மேலும் தேர்வாளர்களுக்கு கிரிக்கெட் குறித்த அனுபவம் அதிகமாக இருக்க வேண்டும் இதுவே எனது கருத்து என்றும் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.