கிரிக்கெட் போட்டிகள் பொறுத்தவரை வெற்றியென்றாலும் சரி தோல்வியென்றாலும் சரி அது அந்த அணியில் இருக்கும் கேப்டனையே சாரும். அதுவும் தற்போது நடந்து வரும் ஐ பி எல் போட்டிகளில் டெல்லி அணியின் மிகவும் மோசமாக விளையாடி வந்ததால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது . எனவே டெல்லி அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து கம்பிர் விலகினார் .
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவதுடன் ஐ.பி .எல் போட்டிக்காக தனக்கு பேசப்பட்ட சம்பள உதியமான 2 .80 கோடி தொகையை கூட வாங்கப்போவது இல்லை என்று கம்பிர் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் தொடர் தோல்வி காரணமாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்த கம்பிர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
மேலும் இதுபற்றி டெல்லி அணி சார்பில் தெரிவித்த போது “தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் கம்பீர் மனதளவில் சோர்வை சந்தித்துவிட்டார் இதனால் பஞ்சாப் அணியுடனான தோல்வியின் போதே கம்பிர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அணி நிர்வாகம் அவரை எப்படியோ சமாதானம் செய்த பின்னரே அவர் தொடர்ந்து ஆட சம்மதித்தார் ” என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் இதுவரை நடந்த முடிந்த ஐபில் தொடர்களில் பல அணிகளின் கேப்டன்கள் தங்கள் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விளங்கியுள்ளனர் . ஆனால் ஐபில் வரலாற்றிலியே தனது அணியின் தோல்விக்காக தனது கேப்டன் பதவியை தூக்கி ஏறிந்ததுடன் , தனது சம்பள தொகையையும் வேண்டாம் என்று கூறிய முதல் கேப்டன் கம்பிர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது .