இவங்க 2 பேர பாத்து தொடர்ச்சியா எப்படி நல்லா விளையாடறதுனு கத்துக்கோங்க – சாம்சனை விளாசிய கம்பீர்

Gambhir

ஐபிஎல்லில் நீண்டகாலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் சஞ்சு சாம்சனிடம் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கேப்டனாக பொறுப்பேற்ற சஞ்சு சாம்சன், இந்த தொடரில் ராஜஸ்தான் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். மேலும் ஐபிஎல்லில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Samson-1

ஆனால் எப்போதும் போலவே இந்த ஐபிஎல் தொடரிலும் முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு மற்ற போட்டிகளில் சொதப்ப ஆரம்பித்துவிட்டார். முதல் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன், அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் சோபிக்கத் தவறிவிட்டார். இதனால் ராஜஸ்தான் அணியானது புள்ளிகள் பட்டியிலில் கடைசி இடத்தில் உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அதை பெரிய ஸ்கோராக மாற்றாமல் அலட்சியமாக ஒரு ஷாட் ஆடி 21 ரன்னில் வெளியேறினார்.

தொடக்க விக்கெட்டுகளை இழந்து ஒரு அணி தடுமாறும்போது, கேப்டனாக பேட்டிங்கில் அந்த அணியை வழிநடத்திச் செல்லாமல் அலட்சியமாக அவுட்டான சஞ்சு சாம்சனை அனைவரும் விமர்ச்சித்து வருகின்றனர். ஏற்கனவே சுனில் கவாஸ்கர் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை விமர்சித்திருந்த நிலையில் இப்போது கம்பீரும் அவரை விமர்ச்சித்துள்ளார். சஞ்சு சாம்சனைப் பற்றி பேசிய கம்பீர்,

Samson-1

சஞ்சு சாம்சன் ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரிலும் மில்லயன் டாலர் பேபியாக ஆரம்பித்து அதன்பின்னர் படுமோசமாக விளையாடுகிறார். அவர் ஐபிஎல்லை தொடங்கும் விதத்தைப் பார்க்கும்போது அந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வாங்குவார் என்ற நம்பிக்கை எழும். ஆனால் அதற்கடுத்த போட்டிகளிலேயே அவர் சொதப்ப ஆரம்பித்து விடுவார். ஒரு வீரராக அணிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்துகொண்டே இருக்க வேண்டும். கேப்டனாக இருக்கும்போது அந்த பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். ஒரு போட்டியில் சதமடித்து விட்டு மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாவது போன்ற ஏற்ற இறக்கங்களை ஒரு வீரர் தன்னுடைய கிரிக்கெட் கெரையரில் வைத்துக் கொள்ளக்கூடாது.

- Advertisement -

samson 2

கோலி மற்றும் ஏபி டிவில்லியர்சை பாருங்கள், ஒரு போட்டியில் சதமடித்தால் அடுத்த போட்டியில் அந்த ஃபார்மை தொடர்ந்து கொண்டுபோவார்கள். முதல் போட்டியில் சதமடித்துவிட்டு அடுத்த பல போட்டிகளில் சரியாக விளையாடாமல் மீண்டும் ஒரு முறை சதமடிப்பது ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுக்கு அடையாளம் கிடையாதென்று, சஞ்சு சாம்சனைப் பற்றி கம்பீர் கூறினார்.